காருடன் கடத்தப்பட்ட மூதாட்டி பத்திரமாக மீட்பு!

ஒன்றாரியோ – மிசிகுவா பகுதியில் காருடன் கடத்தப்பட்ட 96 வயதான மூதாட்டியொருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) மாலை காரை நிறுத்திவிட்டு சாரதி சென்றபின்னர், ஒருவர் காரிற்குள் ஏறி அதனை செலுத்திச் சென்றுள்ளார். அப்போது காருக்குள் 96 வயதான மூதாட்டியொருவரும் இருந்துள்ளார்.

எனினும், ஒரு மணித்தியாலத்தின் பின்னர் ஓக்விலி பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கார் நின்றுள்ளது. அத்தோடு, மூதாட்டியும் காப்பாற்றப்பட்டுள்ளார்.

20 தொடக்கம் 30 வயதிற்கு இடைப்பட்ட, பழுப்பு நிற தலைமயிரைக் கொண்ட, சிவந்த நிறமுடைய, குள்ளமான ஒருவரே காரை செலுத்திச் சென்றதாக குறிப்பிடும் பீல் பிராந்திய பொலிஸார், சந்தேகநபரை தேடி விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.