செத்தவீட்டில் பரதமைல் – திருந்தாத ஜென்மங்கள்!

கடந்த வாரம் ஊடகங்கள் வாயிலாக முன்வைக்கப்பட்ட பரதமைல் தொடர்பான பல கேள்விகள் ஊடக உலகிலும், பொதுமக்கள் மத்தியிலும் பல அதிர்வலைகளையும், மிகப்பிரமாண்டமான எதிர்வினையையும் ஆற்றியுள்ளது.

மிகவும் மேலான நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு மிகவும் கீழ்த்தரமான தனிமனித புகழுக்காக மாற்றப்பட்ட நிகழ்வாகவே அது அமைந்ததாக பல ஆதாரத்துடன் அது சுட்டிக்காட்டப்பட்டது.

இருப்பினும் சமூக ஆரோக்கியம் கருதி, ஊடகங்களாலேயே சில தீர்வுக்கான வழிமுறைகளுடன் அது முடித்துவைக்கப்பட்டது.

இருப்பினும் சம்பந்தப்பட்டவர்கள், விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல, ஊடகங்கள் தான் ஏதோ தம்மை பிரபலப்படுத்த பரதமைல் நிகழ்வை பற்றி குறை கூற முயல்வதாக மீண்டும் முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயலுகிறார்கள்.

இதில் கேவலம் என்னவென்றால், அதற்க்கு ஒரு அறிக்கை தயாரித்து நடன ஆசிரியர்களிடம் கையெழுத்து வாங்க நாயாய் அலைகின்றார்கள்.

நிகழ்வை பற்றி கருத்து வெளிப்படுத்தி குறைகளை சுட்டிக்காட்டியவர்களே அந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஆசிரியர்களும் மாணவர்களின் பெற்றோரும் என்பது குறிப்பிடத்தக்கது.

கேவலத்தின் உச்ச சோகம், நேற்று மாலை ஒரு சக நடன ஆசிரியரின் இறந்த இறுதி நிகழ்வில், அந்த இறந்த உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த வந்த ஆசிரியர்களை அந்த மண்டபத்தில் கலைத்து பிடித்து கையெழுத்து வாங்கிறார்கள்.

ஒரு சக இளம் ஆசிரியை, ஆசான், அந்த மிகவும் இதயத்தை பிழியும் சோகமான அந்த நிகழ்விலும் இவர்கள் செய்கின்ற இந்த செயலை என்னவென்றுசொல்வது. இச்செயலால் ஒட்டுமொத்த நடன ஆசிரியர்கள்மீதும் ஒரு வெறுப்பு வருவதை தவிர்க்கமுடியவில்லை.

பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரம், தாங்களே நடன உலகில் ஜாம்பவான்கள் என்பதை தக்கவைக்க இப்படியான கீழ்த்தரமான வேலையில் ஈடுபடுகின்றார்கள், இவர்களுக்கு கூஜா துக்கும் சில ஆசிரியர்கள் (பெயர்கள் பகிரங்கப்படுத்தப்படும்).

விட்ட பிழை விட்டதுதான், ஊடகங்கள் சுட்டி காட்டியிருக்கின்றன.  திருந்துங்கள். உங்கள் அறிக்கைகள் ஊர் வாயையோ, ஊடக  வாயையோ மூடப்போவது இல்லை.

46 ஆசிரியர்களின் பெயர்கள் கீழே அச்சடிக்கப்பட்டுள்ளது. அதன் பக்கத்தில் ஒரு கையெழுத்து போடவேணுமாம்.

இவர்களால் கையெழுத்து வாங்கப்பட்ட அறிக்கையின் அடிப்பகுதி.

இந்த அறிக்கைக்கு தான் கையெழுத்திடவேண்டும்.

சாவீட்டில் உங்கள் ஈனச்செயல்களையாவது நிறுத்துங்கள்.

இந்தியாவில் பாதை ஓரத்தில் பாலியல் புத்தகங்களை இன்னொரு புத்தகத்துக்குள் மறைத்துவைத்து விற்பது போல், அறிக்கையை மறைத்துவைத்துக்கொண்டு வரும் நடன ஆசிரியர்களிடம், வாங்கோ, இதில் ஒரு கையெழுத்து வையுங்கோ என்று சில அல்லக்கைகள் திரிந்தார்களாம்.  ஆசிரியர்களும் ஏதோ இறந்த ஆசிரியருக்கு தான் Tribute Sign பண்ணுறார்கள் என்று போனால், இந்த அறிக்கையில் ஒரு கையெழுத்து போடுங்கோ என கேட்கின்றார்களாம்.

விபரம் சொல்லப்படாமல், கையெழுத்து வைக்குமாறு கேட்கப்பட்டனராம் சிலர், வாசித்துப்பார்க்காமல் கையெழுத்து வைத்த நடன ஆசிரியர் தனது கவலையை எம்முடன் பகிர்ந்துகொண்டார்.

இவர்கள் சாவீட்டிலும் கொட்டி மேளம் தட்டித் தாலி கட்டும் கூட்டமே இந்த சாவீட்டில் கையெழுத்துக்கு நின்றோர்.

“பந்தயம்பிடி அழித்து காட்டுகிறோம்” என்பது போலவே இவர்கள் செயல்பாடுகள் அமைகின்றன,

இதில் ஒரு ஆசிரியை கடந்த சிலநாட்களுக்கு முன்பு எல்லோரும் அறிக்கையில் கையெழுத்து போடுங்கோ, கையெழுத்து போடாதவர்களுக்கு நிரோதினி யாரென்று காட்டுவாள் என்று கர்ஜித்துசென்றுள்ளார்.

மேக்கிறது எருமை இதுல என்ன பெருமை..

திருந்தாத ஜென்மங்கள்..!! கால் காசுக்கு புண்ணியமில்லை..!!

TorontoTamil.com & Media Team


டொரோண்டோவில் நடன ஆசிரியர்களால் ஏமாற்றப்பட்ட 1150 தமிழ் சிறுமிகள் – Updated