போராட்டம் நிறைவடையும் வரை அஞ்சல் அனுப்ப வேண்டாம் – கனடா கோரிக்கை

கனடாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் அஞ்சல் ஊழியர்களின் பணிநிறுத்தப் போராட்டம் நிறைவடையும் முடியும் வரை, அஞ்சல் மற்றும் பொதிகளை அனுப்ப வேண்டாம் என உலக நாடுகளுக்கு கனடா அரசு கோரிக்கை விடுத்துள்ளது.


கனடாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த நாட்டு அஞ்சல் துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், கனடாவில் அஞ்சல் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வான்கூவர், வின்னிபெக் மற்றும் டொரண்டோ நகரங்களில் 200 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.

டொரண்டோ நகரில் 260 ட்ரைலர் பாரவூர்திகளிலும், வான்கூவர் நகரில் 100-க்கும் மேற்பட்ட டிரைலர் பாரவூர்திகளிலும் அஞ்சல் பொதிகள் தேங்கியுள்ளன.

இந்தநிலையில், கனடாவில் எதிர்வரும் நவம்பர் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஷீரோ மண்டே (பூஜ்ஜிய ஞாயிறு ) மற்றும் பிளாக் ஃபிரைடே (கருப்பு வெள்ளி) நிகழ்வுகளுக்கு முன்னதாக அஞ்சல் துறை ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர கனடா அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அஞ்சல்துறை நிர்வாகம்., போராட்டத்தின் நிலை குறித்து அடுத்த அறிவிப்பு விடுக்கப்படும் வரை யுனைடெட் ஸ்டேட்ஸ் போஸ்ட் உள்ளிட்ட அனைத்து சர்வதேச அஞ்சல் சேவை நிறுவனங்களின் பொருட்களையும் தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.