குறைந்த வருமானம் பெறும் பணியாளர்களுக்கான வரி நீக்கம்?

ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்திற்கான வரி அறவீட்டில் இருந்து, குறைந்த வருமானம் பெறும் பணியாளர்களுக்கான வரி நீக்கப்படுவதாக முதல்வர் டக் ஃபோர்ட் தலைமையிலான ஒன்ராறியோ அரசாங்கம் அறிவித்துள்ளது.


இந்த பருவகாலத்திற்கான ஒன்ராறியோ மாகாண அரசின் நிதி நிலை அறிக்கையை முதல்வர் டக் ஃபோர்ட் தலைமையிலான ஒன்ராறியோ அரசாங்கம் நேற்று முன் தினம் வெளியிட்டது. இந்த அறிக்கையிலேயே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது முதலாவது நிதிநிலை அறிக்கையை சபையில் முன்வைத்துள்ள டக் போர்ட் அரசு, அதில் 14.5 பில்லியன் டொலர்கள் பற்றாக்குறை காணப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கு முன்னர் மாநிலத்திற்கான நிதிப் பற்றாக்குறையின் அளவு இதனை விடவும் அதிகமான காணப்பட்ட நிலையில், தாங்கள் பதவிக்கு வந்து சில வார காலங்களிலேயே அதனை 500 மில்லியன் டொலர்களால் குறைத்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.