தமிழ் காங்கிரஸ் முன்னாள் பணியாளர் தரக் குறைவாக நடந்திருக்கிறார் குறித்து அறிக்கை.

கடந்த பல வாரங்களாக பல்வேறு ஊடகங்களில் வெளியான கனடிய தமிழர் பேரவை உறுப்பினர் மேலான தகாத நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகள் அல்லது புகார் தொடர்பான செய்திக்கு, முதன் முதலாக கனடிய தமிழர் பேரவை இயக்குனர் சபை ஒரு அறிக்கையை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

கனடிய தமிழர் பேரவையின் முன்னாள் பணியாளர் தரக் குறைவாக நடந்திருக்கிறார் எனக் குற்றம் சாட்டும் புகார் தொடர்பான CTC இயக்குனர் சபையின் அறிக்கை.கனடிய தமிழர் பேரவை இயக்குனர் சபையின் அறிக்கை

கனடிய தமிழர் பேரவையின் முன்னாள் பணியாளர் ஒருவர் தரக் குறைவாக நடந்திருக்கிறார் எனக் குற்றம் சாட்டும் புகார் ஒன்று பேரவைக்கு கிடைத்திருக்கிறது.  இக் குற்றச்சாட்டைப் பேரவை மிகவும் பாரதூரமானதெனக் கருதுவதுடன் இக் குற்றச்சாட்டின் மீதான தனிப்பட்ட விசாரணை ஒன்றை இன்வெஸ்டிகேட்டிவ் சொலுஷன்ஸ் நெட்வொர்க் (Investigative Solutions Network) என்ற தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. இவ் விடயம் பற்றி மேலும் கருத்துக் கூற இது உகந்த தருணம் அல்ல என்பதை நினைவுறுத்த விரும்புகிறோம்.

கனடிய தமிழர் பேரவை அதன் பணியாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பான சூழல் ஒன்றை வழங்க வேண்டும் என்ற அர்ப்பணிப்பை மனதில் கொண்டு இக் குற்றச்சாட்டை மிகவும் பாரதூரமாக எடுத்துக் கொண்டுள்ளது என்பதை வலியுறுத்துகிறது.

இயக்குனர் சபை
கனடிய தமிழர் பேரவை

CTC Board of Directors

கனடிய தமிழர் பேரவை - இயக்குநர்கள் குழு
President
Dr. Vadivelu Santhakumar
VP
Sivan Ilangko
Secretary
Raveena Rajasingham
Treasurer
Rajkumar Gunaratnam
Board of Directors
Dr. Kanagasabapathy Chandrasegaram
Board of Directors
Thirukumaran Thirunavukarasu
Board of Directors
Nadarajah Vijayabalan

Statement from the Canadian Tamil Congress Board of Directors

November 15, 2018.

The Canadian Tamil Congress (CTC) advises we have received an allegation of misconduct by a former employee of the CTC. This complaint has been taken seriously by the CTC and the private investigation agency, Investigative Solutions Network, is conducting an ongoing investigation. It would be inappropriate to comment further at this time.

The CTC takes this allegation seriously due to its commitment to provide a safe environment for its employees and clients.

Board of Directors,
Canadian Tamil Congress


கனடிய தமிழ் காங்கிரஸ் மேல் பாலியல் குற்றசாட்டு!