பிரதமர் ட்ரூடோவின் எளிமையான சிங்கப்பூர் சுற்றுப் பயணம்!

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிராந்திய மாநாட்டின் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ள நிலையில், பொது வர்த்தக நிலைய பகுதிக்கு எளிமையான சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.


இன்று (வெள்ளிக்கிழமை) காலை வர்த்தக நிலைய பகுதிக்கு விஜயம் செய்த அவர், அங்கிருந்த பொது மக்களுடன் சுமூகமாக அலவலாவியதுடன், அவர்களுடன் ஒளிப்படங்களையும் எடுத்துக் கொண்டார்.

ஒரு பிரதமர் என்ற பெருமிதம் இன்றி சாதாரண பாணியில் மக்கள் மத்தியில் சென்றமை அனைவரையும் பிரம்மிப்படைய செய்துள்ளது.

10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் “ஆசியான்’ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் ட்ரூடோ, தனது சக நட்பு நாடுகளான அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரிய நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார்.

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் வர்த்தக போர் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையுடன் செயற்படவுள்ளதாக கனடா பிரதமர் நேற்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் சீனா தமக்கிடையில் பரஸ்பரம் இறக்குமதிகளில் கடுமையான தீர்வை வரிகளை சுமத்துகின்றனர்.

இதனிடையே, கடந்த மாதம் சவுதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கிஜி கொல்லப்பட்டமையை அடுத்து 17 சவுதி அதிகாரிகள் மீது அமெரிக்கா திறைசேரி தடைகளை விதித்துள்ளமையை கனடாவும் வரவேற்றுள்ளது. கனடாவும் இதேபோன்ற நடவடிக்கையை எடுத்துள்ளதாக பிரதமர் நேற்று தெரிவித்துள்ளார்.