தென்கிழக்காசிய நாடுகளுடன் தடையற்ற வர்த்தகத்தை மேற்கொள்ள கனடா விரும்பம்

சிங்கப்பூரில் நடைபெறும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான “ஆசியான்” மாநாட்டில் பங்கேற்பதற்காக அங்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதம்ர் ஜஸ்ரின் ட்ரூடோ இந்த விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.

10 தென்கிழக்காசிய நாடுகள் குறித்த இந்த கூட்டமைப்பில் இணைந்துள்ள நிலையில், அவற்றுடனான முழு அளவிலான தடையற்ற வர்த்தக உடன்பாடுகள் குறித்த பேச்சுக்களை எதிர்வரும் இளவேணிற்காலத்தின் தொடக்கத்தில் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஆராயும் பேச்சுக்களை எதிர்வரும் வசந்த காலத்திலேயே நடத்தி முடித்துவிட முடியும் எனவும், உடன்பாட்டினை மேற்கொள்வது குறித்து அடுத்த கட்டமாக செயற்பட முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா, புரூணை, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், லாவோஸ், கம்போடியா, பர்மா ஆகிய இந்த பத்து நாடுகளிடமும், ஐ.நா பாதுகாப்புச் சபையில் கனடா இடம்பிடிப்பதற்கான ஆதரவினை வழங்குமாறும் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆசியான் அமைப்பின் மாநாட்டில் பிரதமர் ஜஸ்டின் ரூடோ கலந்து கொள்கின்றமை இது இரண்டாவது தடவை என்பதுடன், இதற்கு முன்னர் எந்தவொரு கனேடிய பிரதமர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளாத நிலையில், இந்த மாநாட்டில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கலந்து கொள்கின்றமை முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக நோக்கப்படுகிறது.