ஐ.நா.வின் கோரிக்கைக்கு கனடா மறுப்பு!

மாலியில் அமைதிகாக்கும் பணியை நீடிக்குமாறு ஐக்கிய நாடுகள் முன்வைத்துள்ள கோரிக்கையை கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அரசாங்கம் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவின் நீண்டகால அமைதிகாக்கும் பணிகள் எதிர்வரும் ஜுலை மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், கனடாவின் பணியை நீடிக்குமாறு ஐ.நா. கோரியுள்ளது.

ஆனால், ஐ.நா.வின் கோரிக்கையை கனடா மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள போதிலும், அது தொடர்பான உத்தியோகப்பூர்வ ஆவணங்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

காயமடைந்த அமைதிகாக்கும் படையினரை மீட்பதற்கும், துருப்புக்கள் மற்றும் ஆயுத போக்குவரத்திற்காகவும் கனடாவின் எட்டு ஹெலிகொப்டர்கள் மாலியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், 250 கனேடிய இராணுவ வீரர்களும் மாலியில் அமைதிகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.