இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தலை கையாள்வதற்கு சிங்கப்பூரும் கனடாவும் இணக்கம்!

சிங்கப்பூரும் கனடாவும் இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கையாள்வதற்கான 2 ஆண்டு இணக்கக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளன.

இணையத் தாக்குதல்கள் தொடர்பான தகவல் பரிமாற்றங்களில் இந்த இணைக்கக் குறிப்பு கவனம் செலுத்தும் என்று கூறப்படுகிறது.

இணையப் பாதுகாப்புத் தரநிலையை மேம்படுத்துதல், ஆற்றலைப் பெருக்குவதில் ஒத்துழைத்தல் ஆகியவை இந்த இணக்கக் குறிப்பின் ஏனைய அம்சங்களாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சிங்கப்பூர்ப் பிரதமர் லீ சியென் லூங்கும், கனடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோவும் இந்த இணக்கக் குறிப்பின் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தை முன்னிட்டு பிரதமர் ரூடோ சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள வேளையில் இந்த இணக்கக் குறிப்பு கையெழுத்தாகியுள்ளது.