மூன்று திருடர்களை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

திருட்டு சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் மூன்று பேரை அடையாளம் கண்டுகொள்ள பொதுமக்களின் உதவியை ரொறன்ரோ பொலிஸார் நாடியுள்ளனர்.

அதன் படி கடந்த செப்டெம்பர் மாதம் 67 வயதுடையர் ஓட்டிச் சென்றகாரை வழி மறித்து அவருடைய பணத்தை கொள்ளையிட்டுள்ளனர்.

இதில் 2 பேர் அடையாளம் காணப்பட்டது, அவர்கள் ஆயுதங்களை வைத்திருந்தமையும் சி.சி.டி.வி. காணொளிகள் மூலம் தெரிவியவந்தது.

மேலும் மற்றுமொரு நபரும் சம்பவம் தொடர்பில் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டதுடன், இவர்கள் மூவரும் 20 வயது மதிக்கத்தக்க கறுப்பினத்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு தொடர்பினை ஏற்படுத்தி தகவல் வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.