தெற்கு ஒன்ராரியோவில் சிறியரக விமானம் விபத்து: இருவர் உயிரிழப்பு!

தெற்கு ஒன்ராரியோ விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, ஒரு சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விமான விபத்தில் 81 வயதான விமானியான ரன் சேம்பர்லினும் அவரது 76 வயதான மனைவி மில்ட்ரட்டும் உயிரிழந்ததாக ஒன்ராரியோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த விமான நிலையத்தின் ஓடுபாதையின் சமிக்ஞை விளக்குகள் சரிவர இயங்காததால் குறித்த விமான விபத்து ஏற்பட்டிருக்கலாம் என விமான நிலையப் பாதுகாப்புப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் உயிரிழந்த விமானி மிகவும் திறமையானவர் எனவும், அவரிடம் இவ்வாறான மேலும் மூன்று சிறியரக விமானங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக ஒன்ராரியோ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.