அதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு!

கனடாவில் அதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

பொலிஸாரை மேற்கோள்காட்டி ஊடகங்கள் சில குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்துவதற்கு அண்மையில்கனடா அரசாங்கம் அனுமதி வழங்கியது.

அத்துடன், அனுமதியளிக்கப்பட்ட பகுதிகளிலேயே கஞ்சாவினை விற்பனை செய்ய முடியும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனினும், சட்ட விரோதமான முறையில் கனடாவின் பல பகுதிகளிலும் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையிலேயே கடந்த  24 மணித்தியாலங்களில் அதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.