ஈழத் தமிழர்களும் பங்குபற்றிய முதலாம் உலக மகா யுத்தம் – world war 1

முதலாம் உலக மாகா யுத்தம் (World War I) முடிந்து (1918 நவம்பர் 11ம் திகதி) இன்றுடன் 100 ஆண்டுகள் கழிந்துவிட்டன.  நம் ஈழத் தமிழர்களும் ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் இந்த World War I உலக மகா யுத்தத்தில் பங்களித்திருக்கிறார்கள்.  அவ்வாறு பங்களித்த ஒருவர் ஆறுமுகம் பரமநாதன் (இலக்கம் 1850) என்ற ஈழத்தமிழர்!

பிரித்தானியப் படையின் Royal Bucks Hussars பிரிவில் சேர்ந்து ஒரு போர்வீரனாக பரமநாதன் எகிப்தில் திறக்கப்பட்ட பிரித்தானிய யுத்தமுனைக்குச் சென்றிருக்கிறார்.  இன்று கனடாவில் யுத்த வீரர்கள் கௌரவிக்கப்படும் Remembrance Day!

முதலாம் உலக யுத்தம் 1914ம் ஆண்டு ஜூலை 28 ஆரம்பித்து 1918 நவம்பர் 11 வரை தொடர்ந்த பெருயுத்தம்.  4வருடங்கள் 3 மாதங்கள் 2 வாரங்கள் உலகம் அழிவை தினம் தினம் சந்தித்த யுத்தம்.  யுத்தங்களை முடிக்கும் யுத்தம் எனப்பட்ட அந்த யுத்தத்தில் இணையுமாறு அன்றைய பிரித்தானிய அரசு தன் குடிமக்களான கனடா, இந்தியா, அவுஸ்த்ரேலியா, நியூசிலாந்து வாழ் மக்களையும் அழைத்தது.

(“பேரரசுக்கு ஆண்கள் தேவை. அனைவருக்கும் அழைப்பு! இளம் சிங்கங்களின் உதவியால் மூத்த சிங்கம் தனது எதிரிகளை எதிர்த்து நிற்கிறது. இப்போதே பதிவு செய்”) யுத்தக் கோரிக்கை…

1901ம் ஆண்டு புலமைப்பரிசில் பெற்றுச் பிரித்தானியாவில் பொறியியல் கல்வி கற்ற சென்றிருந்த பரமநாதன் காதிலும் விழுந்தது. கல்வியா? தேசத்திற்கான கடமையா? ஒரு மாணவனாக தன் எதிர்காலம் என்னவாகும்? யோசிக்கவில்லை – எதுவிதத் தயக்கமும் இன்றி ஒரு பிரித்தானிய தேசப்பற்றாளராக பிரித்தானியப் படையில் ஒரு இராணுவ சிப்பாயாக இணைந்து கொண்டார் பரமநாதன்.  எகிப்து நாட்டில் அவர் தன் போர்க் கடமைகளை முடித்தார். (யுத்தம் முடிந்தபின்னர்தான், திருமணம் செய்யாமல் சந்ததி இல்லாமலே அவர் மரணித்துக் கொண்டார்.)

ஈழத் தமிழ் வரலாறு இவரை மறந்துவிடலாகாது.  அதுமட்டுமல்ல நம் சக கனடியர்களுக்கும் இவையெல்லாம் தெரியப்படுத்தப்படவும் வேண்டும்.  அன்றைய பிரித்தானியப் பேரரசின் கொடியைக் காக்க கனடியர்கள் மட்டுமல்ல ஈழத்தமிழர்களும் தம் வாழ்நாளை அர்ப்பணித்திருக்கிறார்கள்.

இன்று 11 -11 – 2018 கனடாவில் யுத்த வீரர்கள் கௌரவிக்கப்படும் Remembrance Day!