ஒன்லைன் மூலம் விமான நிலையத்திற்கு அச்சுறுத்தல் – ஹமில்டன் இளைஞன் கைது!

ஹமில்டன் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு ஒன்லைன் மூலம் அச்சுறுத்தல் விடுத்த இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை இரவு 7:30 மணியளவில் ஒன்லைன் அச்சுறுத்தலை அறிந்த பின்னர் பொலிஸார் ஜோன் சி. முர்ரோ விமான நிலையதிற்கு சென்றனர்.

இந்த அச்சுறுத்தலால் விமான நிலைய செயற்பாடுகள் மற்றும் விமானங்களின் பயணத்தில் எந்தவித தடங்கலும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் பின்னர் விசாரணைகளை மேற்கொண்டு வந்த 30 ஆவது பொலிஸ் பிரிவின் குற்றவியல் புலனாய்வு பிரிவு நேற்று (சனிக்கிழமை) குறித்த இளைஞனை கைது செய்தது.

கைது செய்யப்பட்டவர் ஹமில்டன் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய அந்தோனி ஆன்டோஸ்கி-சவுத்தோன் எனவும், அவர் மீது 12 குற்றச்சாட்டுக்கள் (3 அச்சுறுத்தல் குற்றச்சாட்டும்) முன்வைக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.