ரஷ்யா – சீனாவை எதிர்கொள்ள போர்க்கப்பல் பயிற்சிகளில் கனடா பங்கேற்பு!

ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்களை வேட்டையாடுவதற்காக நிர்மானிக்கப்பட்ட, கனேடிய போர்க்கப்பலான HMCS கால்கரி, மேற்கு பசிபிக் பிராந்திய பயிற்சிகளுக்கு பதிலாக ஜப்பானிய மற்றும் அமெரிக்க கூட்டுப் படைகளுடன் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது.


சீனாவின் செல்வாக்கு அதிகம் நிறைந்த இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் நடைபெறும் இந்த பயிற்சி நடவடிக்கையில், வொஷிங்டன் மற்றும் டோக்கியோ நிர்வாகங்களும் பங்களிப்பு செலுத்தியுள்ளன.

இந்தநிலையில், தென் சீனக் கடலில் கனடாவின் பிரசன்னம் தொடர்ந்தும் இருக்கும் என்ற கல்கரியின் கட்டளை அதிகாரி பிளேயார் சல்டெல் தெரிவித்துள்ளார்.

அவரது கப்பல் டோக்கியோவுக்கு அருகில் உள்ள கப்பல் தளத்தில் தரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் பயணத்தை ஆரம்பித்து கிழக்கு சீனாவின் கடற்பரப்பின் வழியாக அவுஸ்ரேலியா வரை சென்றதுடன், சீன கப்பல்களையும் எதிர்கொண்டது.

கடந்த வாரம், ஜப்பான் மற்றும் அமெரிக்கா போர்க்கப்பல்களின் யு.எஸ்.எஸ் ரொனால்ட் றேகன் விமான தாங்கி கப்பல் உட்பட பல கப்பல்கள், மேற்கத்தைய பசிபிக் கடற்பரப்பில் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு போர் பயிற்சிகளில் ஈடுபட்டன. இது மிகப்பெரிய போர் தயார்நிலை பயிற்சிகளின் ஒரு பகுதியாக விளங்குகிறது.