கயானாவில் இருந்து ரொறன்ரோ நோக்கி சென்ற விமானம் விபத்து – 6 பேர் படுகாயம்!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கயானாவில்(Guyana) இன்று அவசரமாக தரையிறங்கிய விமானம் கட்டுப்பாட்டை இழந்து இன்று (வெள்ளிக்கிழமை) விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றானகயானா (Guyana) வடக்கு அட்லாண்டிக் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது. இந்நாட்டின் தலைநகரான ஜார்ஜ்டவுனில் இருந்து ஏயார் ஜமைக்கா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் ஜெட் ரக விமானம் 126 பயணிகளுடன் கனடாவின் ரொறன்ரோ நகரை நோக்கி சென்றது.

 

வானில் பறந்து கொண்டிருந்த சில நிமிடத்தில் இயந்திர கோளாறு உள்ளதை அறிந்த விமானி அந்த விமானம் உடனடியாக ஜார்ஜ்டவுன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டார்.

இதைதொடர்ந்து ,கடுமையான அதிர்வுடன் தாறுமாறாக தரையிறங்கிய அந்த விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று வேலியை உடைத்துகொண்டு நின்றது. இந்த விபத்தில் விமானத்தின் இறக்கை உள்ளிட்ட சில பகுதிகள் சேதம் அடைந்தன.

இந்த விபத்தில் காயமடைந்த 6 பேர் உடனடியாக வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.