தமிழ்மிரர் விருது விழா 2018 – ஊடக சந்திப்பு

கனடா டொரோண்டோவில் இருந்து பல ஆண்டுகளாக வெளிவரும் ஒரே ஒரு தமிழர் ஆங்கில ஏடு தமிழ் மிரர் ஆங்கிலப் பத்திரிகையின் வருடாந்த விருது வழங்கும் விழாவும் இரவு விருந்துபசாரமும் (Tamil Mirror Awards Gala 2018) எதிர்வரும் ஞாயிறுக்கிழமை (Nov 11, 2018) அன்று ஸ்காபரோவில் உள்ள Chinese Cultural Centre இல் மிகவும் சிறப்பாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது.  பலவேறு துறைகளைச் சார்ந்த திறமை மிக்கவர்கள் சிலர் தெரிந்தெடுக்கப்பட்டு இந்த விருது வழங்கும் விழாவில் அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.


Photo Credit: Ravi Atchuthan

இந்நிகழ்வுக்கு இந்தியாவில் இருந்து சிறப்பு பேச்சாளராக மைன்ட் ஃபிரஷ் நிறுவனர், மனநல ஆராய்ச்சியாளர், பயிற்சியாளர் கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முதன்முதலாக கனடா வந்துள்ளார்.

Photo Credit: Ravi Atchuthan

விழா பற்றிய ஒரு ஊடக சந்திப்பு இன்று இரவு நியூ ஜாஸ்மின் (New Jaasmin Banquet Hall) மண்டபத்தில் நடைபெற்றது.

சந்திப்பில் Tamil Mirror பத்திரிகை அதிபர், ஆசிரியர் சார்லஸ் தேவசகாயம் அவர்களும் சிறப்பு பேச்சாளர் கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி அவர்களும் விழா பற்றிய தகவல்களை வழங்கியதுடன் ஊடகங்களின் கேள்விகளுக்கும் சுவாரசியமாக பதிலளித்ததுடன், விழாவில் கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி என்ன தலைப்பில் பேசுவார் என்ற விடையம் “சஸ்பென்ஸ்” என்ற எதிர்பார்ப்புடன் சந்திப்பு இரவு உணவுடன் இனிதே நிறைவடைந்தது.

இவ்விழாவுக்கு சென்று Tamil Mirror பத்திரிகைக்கு ஆதரவு வழங்கி, நிகழ்ச்சிகளை ரசித்து, கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சிறப்பான பேச்சையும் கேட்டு, இந்த அரிய முயட்சிக்கு ஆதரவு வழங்குமாறு சக ஊடகம் என்ற வகையில் எல்லோரையும் கேட்டுக்கொண்டு எமது ஆதரவையும் வழங்குகின்றோம்.

  • Thanks Photo Credits: Ravi Atchuthan & Gana Arumugam

நன்றி
TorontoTamil.com