குப்பைமேட்டில் ஏற்பட்ட தீயில் ஒருவர் உயிரிழப்பு!

கனடா ஒன்றாரியோவில் குப்பை மேட்டில் ஏற்பட்ட தீயில் ஒருவர் உயிரழந்துள்ளார்.


மேற்கு ஒன்றாரியோவிலுள்ள கிலலொயி ஹகர்டி றிச்சட்ஸ் நகரின் மாஸ்க் வீதியில் நேற்று (புதன்கிழமை) காலை குப்பைமேடொன்றில் தீப்பற்றியுள்ளது.

குப்பை மேட்டில் குறித்த தீ உருவான போதிலும், அது அருகிலிருந்த வீடுகளுக்கு பரவியுள்ளது.

இத்தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புப்படையினர் குப்பை மேட்டுப் பகுதியில் சடலமொன்றை கண்டெடுத்துள்ளனர்.

எனினும், குறித்த சடலம் இதுவரை அடையாளங்காணப்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தீ பரவல் மற்றும் சடலம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அம்மாநில பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.