கனடாவில் ஆள்மாறாட்ட குற்றத்திற்காக ஒருவர் கைது!

இராணுவ வீரர் போல் நடித்து நிதி சேகரித்த குற்றத்திற்காக கனடாவின் ஒன்றாரியோவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஒன்றாரியோ மாகாணத்திலுள்ள கிழக்கு ஒட்டாவாவில் இவர் ஆள்மாறாட்டம் செய்ததாக குறிப்பிடப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

47 வயது மதிக்கத்தக்க குறித்த சந்தேகநபர், தனது சொந்த நிறுவனமொன்றிற்காக இராணுவ வீரரின் உடைகளை அணிந்து பொது மக்களிடம் கடந்த வெள்ளிக்கிழமை நிதி வசூலித்துள்ளார்.

அது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.