தமிழ் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிக்கும் அபாயம்!

கனடாவில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் பலரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


கனடாவில் கஞ்சா போதைப்பொருள் பயன்பாடு அண்மையில் சட்ட பூர்வமாக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கனடா அண்மையில் வெளியிட்டது.

பொழுதுபோக்கு உபயோகத்திற்காக கஞ்சாவை சட்டபூர்வமாக விற்பனை செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கனடாவில் வாழும் சீன பிரஜைகளை கஞ்சா பயன்பாட்டில் இருந்து விலகியிருக்குமாறு சீன அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, கனடாவில் புலம் பெயர்ந்து சென்ற தமிழர்களும் அதிகம் வாழுகின்றனர்.

இந்நிலையில் புதிய சட்டத்தின் மூலம் தமிழர்களின் கலாச்சாரம் சீரழிந்து இளைஞர், யுவதிகள் பாதிப்படையக் கூடிய அபாய நிலை காணப்படுவதாக தமிழ் சமூகம் கவலை வெளியிட்டுள்ளது.