பாதிக்கப்பட்ட படைவீரர்களுக்கு ஓய்வூதியங்களை வழங்க 165 மில்லியன் டொலரை ஒதுக்கியது மத்திய அரசு முடிவு!

இலட்சக்கணக்கான ஊனமுற்ற படைவீரர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்கு ஏழு ஆண்டுகளுக்கு வழங்கப்படாத ஓய்வூதியங்களை வழங்க மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.


அதன் படி சுமார் 165 மில்லியன் டொலரை இதற்காக ஒதுக்கியுள்ளதாக படைவீரர் விவகார அமைச்சர் Seamus O’Regan நேற்று (திங்கட்கிழமை) அறிவித்தார்.

அந்தவகையில் மத்திய அரசாங்கம், NDP அரசாங்கத்தை வென்றவர்கள் நலன்களுக்காக ஒதுக்கப்பட்ட அனைத்து பணத்தையும் வழங்குவதை அவர் உறுதி செய்தார்.

மேலும் 2003 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தனிப்பட்ட வரி விலக்குகளில் மாற்றத்தை சரியாக கணக்கில் எடுக்காததால் பாதிக்கப்பட்ட சுமார் 270,000 பேருக்கு ஓய்வூதியங்கள் வழங்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவர்களுக்காக 165 மில்லியன் டொலரை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.