கனடிய தமிழ் காங்கிரஸ் மேல் பாலியல் குற்றசாட்டு!

என்னதான் நடக்கிறது கனடிய தமிழர் பேரவையில்?

கனடாவில் 2001 இறுதியில் மக்களுக்காக வன்னியில் இருந்த தமிழ் ஈழ தலைமையின் அனுசரணையில் ஆரம்பிக்கப்பட்டு பல ஆண்டு காலங்களாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக கனடிய பொது வெளியில் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டிருக்கும் ஒரு அமைப்பே கனடிய தமிழர் பேரவை – Canadian Tamil Congress (CTC).

கழுதை தேய்ந்து கட்டெறும்பானதைப்போல, 2009 ஆண்டுக்கு பின்னர் அது தனது தான்தோன்றித்தனமான பாதையில் பயணிக்க தொடங்கிவிட்டதோ பேரவை எனும் விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. இது பற்றி பல்வேறு விமர்சனங்கள் இருந்தபொழுதிலும் மக்களுக்கான அமைப்பாகவே மக்கள் இதற்கான ஆதரவை தொடர்ந்து வழங்கிவந்தனர்.

படிப்படியாக வெளிப்படை தன்மை அற்ற அமைப்பாக மாறி இறுதியில் அது ஒரு மக்களுக்கு முரணான அமைப்பாகவே மாற்றம் கண்டு நிற்கின்றது என்ற விமர்சனத்தில் வந்து நிற்கின்றது.

CTC Board of Directors

கனடிய தமிழர் பேரவை - இயக்குநர்கள் குழு
President
Dr. Vadivelu Santhakumar
VP
Sivan Ilangko
Secretary
Raveena Rajasingham
Treasurer
Rajkumar Gunaratnam
Board of Directors
Dr. Kanagasabapathy Chandrasegaram
Board of Directors
Thirukumaran Thirunavukarasu
Board of Directors
Nadarajah Vijayabalan

இதன் தலைவர்களாக 2 ஆண்டுக்கு ஒருமுறை அடையாளப்படுத்தப்படுபவர்கள் ஒரு பினாமிகள் போன்ற ஒரு தோற்றத்தையே மக்கள் மனதில் ஏற்படுத்தி நிற்கின்றனர் என்பதே இன்றைய யதார்த்தம்.  கனடிய தமிழ் காங்கிரஸ் என்றால் அங்கு சம்பளத்துக்கு வேலை செய்பவர்கள் மட்டுமே தெரிகின்றார்களே தவிர, தலைவர்களை முன்வரிசைகளில் காணமுடிவதில்லை.

பல்வேறு விமர்சனத்துக்கு மத்தியில் பயணிக்கும் இந்த அமைப்பு பொது வெளியில் மக்கள் சம்மதமின்றியே தம்மை மக்கள் பிரதிநிதிகளாக பிரகடனப்படுத்தி நிற்கின்றார்கள் என்பதே இன்றுள்ள விசனம்.

வெளிப்படைத்தன்மை இல்லாத, மக்கள் கேள்விகளுக்கும், முறைப்பாடுகளுக்கும் முறையான பதிலளிக்காமல், மக்கள் விரோத போக்காக பொதுவெளியில் கேள்விகேட்பவர்களுக்கு மக்கள் பணத்தில், மக்களுக்காக இயங்கும் ஒரு அமைப்பு அந்த மக்கள் பணத்திலேயே கேள்விகேட்பவருக்கு எதிராக எவ்வித சமரசமுமின்றி வழக்கு தொடர்கின்றது.

இதுபற்றிய, இன்றைய நிலை பற்றி பல்வேரு மட்டங்களில் அதிருப்திகள் முன்வைக்கப்பட்டாலும், 2009 ஆண்டுக்கு முன்னர்  மக்களுடனும், எமது தாயாக விடுதலைப்போராட்டத்துடனும்  பரிட்சயமில்லாதவர்களினாலேயே இன்று கனடிய தமிழ் காங்கிரஸ் நிர்வகிக்கப்படுகின்றது.

அங்கு சம்பளத்துக்கு வேலை செய்பவர்களே தலைவர்களை நியமிக்கும் நிலை காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கும் நிலையில் அந்த அமைப்பு இன்று உள்ளது.

மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காத எந்த அமைப்பும் வரலாற்றில் தொடர்ந்து நின்றதாக சரித்திரம் இல்லை என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து செயல்படவேண்டும் என்பதே இன்றைய செய்தியும் இதைப்போன்ற அமைப்புகளுக்கு விடுக்கப்படும் கோரிக்கையும் ஆகும்

இது பற்றி இன்று (Nov 5, 2018) சக ஊடகம் ஒன்றில் வெளியான பேட்டி.

(கனடிய தமிழ் காங்கிரஸ் மேல் பாலியல் குற்றசாட்டு: வீடியோ இணைப்பு)

 

Special Interview

Posted by Tamilonetv on Monday, November 5, 2018

 

பேரவை பற்றிய அடுக்கடுக்கான புகார்களும் குற்றச்சாட்டுகளும் கடந்த சில நாட்களாக, மாதங்களாக வெளியில் வருகின்றது.  சிலவற்றுக்கு மாத்திரம் மின்னஞ்சலில் மறுப்பறிக்கை மட்டும் விடுவதோடு கனடிய தமிழர் பேரவை அடங்கிவிடுகின்றது. பொது வெளியில் இருக்கும் பல கேள்விகளுக்கு மக்களை சந்திக்க ஏன் ஒரு பொது (CTC) அமைப்பு பின்னிக்கிறது.


ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு கனடிய தமிழர்களின் பங்களிப்பு.

கனடிய தமிழ் காங்கிரஸ் 2016 இல் மக்களின் அவசர வாழ்வாதாரத்துக்கென நிதிசேர் நடையில் சேர்த்த பணம் மாயம்.