பெண் ஒருவர் மீது பாலியல் துஸ்பிரயோகம் – சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டார்!

விக்டோரியா பார்க் பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் மீது பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் புகைப்படத்தை ரொறன்ரோ பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

பேருந்து நிலையத்தில் கிடைக்கப்பெற்ற சி.சி.டி.வி. காணொளிகள் மூலம் குறித்த நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த மாதம் 26 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் 28 வயதுடைய பெண்ணொருவர் பாதிக்கப்பட்டார்.

இந்நிலையில் புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸார், குறித்த நபரை இறுதியாக விக்டோரியா பார்க் மற்றும் டான்ஃபோர்ட் அவென்யூ பகுதியில் இறுதியாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு அழைப்பினை ஏற்படுத்துமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.