துப்பாக்கிகளுடன் 50 வயது பெண் கைது!

கனடாவிற்குள் பிரவேசிக்க முயன்ற 50 வயதான மூதாட்டி ஒருவர் 25 துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒண்டாரியோவின் Fort Erie நகரில் அமைந்துள்ள எல்லை வழியாக அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் ஒரு SUV ரக வாகனம் ஒன்று நுழைந்தது. அதை சோதனையிட்ட பொலிஸார் அதில் ஒரு காஸ் டாங்க் இருப்பதைக் கண்டனர்.

சந்தேகத்தின்பேரில் அதை வெட்டிப் பார்த்தபோது, அதினுள் 25 கைத்துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்த வாகனத்தை ஓட்டி வந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர் மீது ஆயுதம் கடத்தியது உட்பட பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, 2017ஆம் ஆண்டில் மட்டும் டொராண்டோ பொலிஸார் 726 துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளனர்.

அவற்றில் 328 துப்பாக்கிகள் மட்டுமே எந்த நாட்டைச் சேர்ந்தவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 180 துப்பாக்கிகள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை, 148 கனடாவில் தயாரிக்கப்பட்டவை என குறிப்பிடப்படுகின்றது.