சிறிய ரக விமானம் மற்றொரு விமானத்துடன் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

ஒட்டாவா அருகே சிறிய ரக விமானம் மற்றொரு விமானத்துடன் மோதி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


குறித்த விபத்தானது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒட்டாவாவில் இருந்து சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்றை எடுத்துக்கொண்டு விமானி மட்டும் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த விமானம் கார்ப் என்ற இடத்தில் மற்றொரு விமானத்துடன் மோதி வயல் ஒன்றில் விழுந்ததாகவும் இதில் விமானி  உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் மற்றொரு விமானம் அதிர்ஷ்டவசமாக ஒட்டாவா விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

இருப்பினும் குறித்த விபத்துக்கான காரணங்கள் தெரியவராத நிலையில், மேலதிக விசாரணைகல் இடம்பெற்று வருகின்றது.