கனடா சிறையில் இருந்த கைதி திடீர் மரணம்!

கனடாவின் ஸ்டோனி மவுன்டேய்ன் சீர்திருத்த சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 26 வயதான கைதியொருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக கனடாவின் சீர்திருத்த சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘நோலன் ரென்டன் தோமஸ்’ என்ற குறித்த கைதி நேற்று முன்தினம் (வௌ்ளிக்கிழமை) உயிரிழந்ததாக நிறுவனத்தினால் நேற்று வௌியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிடோபா மாகாணத்தில் உள்ள Stony Mountain Institution சிறையில் ஐந்து ஆண்டுகள் நான்கு மாதம் தண்டனையுடன் சிறையில் இருந்த கைதி தோமஸ் திடீரென மரணமடைந்துள்ளார்

கொள்ளை மற்றும் அதிகாரியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் குறித்த சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். அவரது மரணம் குறித்து துரித விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.