கஞ்சா விற்பனையகத்தின் தாமதம் தொடர்பில் முறைப்பாடு

ஒன்ராறியோவிலுள்ள கஞ்சா விற்பனையகத்தின் தாமதம் தொடர்பில் மின்னஞ்சல் மூலம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒம்பியூட்மன் அலுவலகத்தின் பேச்சாளர் லிண்டா வில்லியம்ஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்பாடுகளுக்கு அமைய வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறான சேவைகளை வழங்க முடியும் என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்ராறியோ கஞ்சா விற்பனையகத்தில், இணையத்தின் மூலமாக பலர் கஞ்சாவினை பெற்றுக்கொள்கின்றனர். இந்தநிலையிலேயே கடந்த சில நாட்களாக தாமதம் நிலவுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கனடாவில் கஞ்சா போதைப்பொருள் பயன்பாடு அண்மையில் சட்ட பூர்வமாக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை அண்மையில் கனடா வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.