சுப்ரமணிய சுவாமியின் கனடா வருகையும், தமிழர்களின் எதிர்ப்பும்!

சுப்ரமணிய சுவாமியின் கனடா வருகையும், தமிழர்களின் குழப்பமும்!

கடந்தமாதம் (Nov 3, 2018) இந்து நாகரிக கனடிய அருங்காட்சியகம் (Canadian Museum of Indian Civilization) டொரோண்டோ இன்டர்நேஷனல் சென்டரில் நடத்திய இந்து பாரம்பரிய மாத நிகழ்வில் பிரதம அதிதியாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி கலந்துகொண்டார்.மாநாட்டு மண்டபத்தில் சுப்ரமணிய சுவாமி அவர்கள் பல கனடிய அரசியல் பிரமுகர்களையும் சந்தித்து கலந்துரையாடினர். இதில் ஒண்டாரியோ பழமைவாதக்கட்சி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் திரு லோகன் கணபதி அவர்களும் கலந்துகொண்டார். https://www.torontotamil.com/2018/11/03/swamy-canada-2018/

Posted by Toronto Tamil on Thursday, December 6, 2018

இன்று சனிக்கிழமை (Nov 3, 2018) இந்து நாகரிக கனடிய அருங்காட்சியகம் (Canadian Museum of Indian Civilization) டொரோண்டோ இன்டர்நேஷனல் சென்டரில் நடத்திய இந்து பாரம்பரிய மாத நிகழ்வில் பிரதம அதிதியாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி கலந்துகொண்டார்.

Subramanian Swamy with Deepak Obhrai & Logan Kanapathi
Subramanian Swamy with Deepak Obhrai & Logan Kanapathi

மாநாட்டு மண்டபத்தில் சுப்ரமணிய சுவாமி அவர்கள் பல கனடிய அரசியல் பிரமுகர்களையும் சந்தித்து கலந்துரையாடினர்.  இதில் ஒண்டாரியோ பழமைவாதக்கட்சி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் திரு லோகன் கணபதி அவர்களும் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக விழா அழைப்பில் குறிப்பிடப்பட்டிருந்தபொழுதிலும் அவர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஈழத்தில் தமிழ்மக்களை இனப்படுகொலை செய்த இரஜபக்சவிற்கு பாரத ரத்னா விருது வழங்க சிபாரிசு செய்ததோடு தொடர்ச்சியாக தமிழக மற்றும் ஈழ தமிழ் மக்கள் மீது பகை வெறியை வெளிப்படுத்தி வரும் சுப்பிரமணிய சுவாமியின் வருகையை எதிர்த்து ஈழத் தமிழர்களும் மற்றும் தமிழ் நாட்டுத் தமிழர்களும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மண்டபத்துக்கு வெளியே அவரின் வருகைக்கு எதிரான ஆர்ப்பாட்ட போராட்டத்தினை நடத்தினார்கள்.