ஜப்பானிய மாணவியை கொலை செய்தவருக்கு கடுமையான தண்டனை!

ஜப்பானிய மாணவியொருவரை படுகொலை செய்த கொலையாளிக்கு, 14 ஆண்டுகள் பிணையில் வெளிவர முடியாத அளவுக்கு, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை நேற்று (வெள்ளிக்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, நீதிபதி லாரா கெரோவினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

51 வில்லியம் சினீடர், 30 வயதான நாட்மிமி கொகாவாவினை கொலை செய்ததாக கடந்த 19ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

குறித்த பெண்னை கொலை செய்த சினீடர், உடலை சூட்கேஸில் முடி வைத்ததாகவும், பின்னர் அவரது உடைகள், உடைமைகளை மறைத்ததாகவும் கூறப்படுகின்றது.

கொகாவாவை கொலை செய்வதற்கான நோக்கம் சினீடருக்கு இல்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள், கொலை முற்றிலும் நிர்பந்திக்கப்படவில்லை எனத் தோன்றுவதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த கொலை இரண்டாம் நிலை கொலை என வர்ணித்துள்ள தடயவியல் அதிகாரிகள், சினீடர், குறித்த பெண்ணை வாயையும் மூக்கையும் மூடி கொலை செய்திருக்கலாம் என கூறுகின்றனர்.