ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு கனடிய தமிழர்களின் பங்களிப்பு.

ஹார்வர்டு பல்கலைக்கழக தென்கிழக்காசிய கல்வித்துறையில் ஓர் அங்கமாக தமிழ் இருக்கை அமைப்பதற்கான பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்றுவந்தது யாவரும் அறிந்ததே. அதன் பொருட்டு உலகெங்கும் உள்ள தமிழ் உணர்வாளர்களிடம் நிதி சேகரிக்கப்பட்டு இன்று ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இதை அமைப்பதற்கு 6 மில்லியன் நிதி கோரப்பட்டது.  முடிவில் 7616 தனிநபர், அமைப்புகளிடம் இருந்து மொத்தம் $6,361,017.68டாலர் (6.36 மில்லியன்) மொத்தமாக சேர்ந்தது.

இவ்வரிய முயட்சிக்கு கனடாவிலும், உலகெங்கும் பல அமைப்புகளும், தனி நபர்களும் தமது நேரத்தையும் பணத்தையும் தாராளமாகவே வழங்கினார்கள்.

கனடாவில் இருந்து சென்ற அதி உயர் தனிநபர்/அமைப்பு பங்களிப்பு

ஹார்வர்டு பக்கத்தில் “Kishan Nithy (Arya Canada)”  பங்களிப்பாக காட்டப்பட்டுள்ள நன்கொடை

அமெரிக்க டாலர், அண்ணளவாக $25,000 கனடிய டாலர்.
$19,012.50 அமெரிக்க டாலர், அண்ணளவாக $25,000 கனடிய டாலர்.

இதில் கனடாவில் இருந்து  ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக கிஷான் (ARIYA CANADA) $25,000.00 கனடிய டொலர்களை அளித்துள்ளார்.  இதுவே கனடாவில் இருந்து ஒரு தனி நபராகவோ அல்லது குழுவாகவோ அல்லது அமைப்பாகவோ அளிக்கப்பட்ட பங்களிப்பில் அதி உயர் தொகையாகும்.

மேலும் பலர் பலர் நிதி சேர் நிகழ்வுகளை நடத்தியபோதும் மிகவும் சிறிய தொகையே கனடாவில் இருந்து தமிழ் இருக்கைக்கு சென்றிருப்பது மிகவும் ஏமாற்றமே.

இந்த முயட்சியில் பலர் முன்வந்து செயல்பட்டாலும், சிலர் தாங்களே தமிழ் இருக்கைக்கே முழுநேர குத்தகைக்காரர் என்பது போல் டொரோண்டோவில் பாசாங்குகாட்டி மேடையேறிணோர் (படம் போட்டோர்) பலர்.

ஹார்வர்டு தமிழ் இருக்கை தமது நிதி கொடுத்தோர் பட்டியலை பொது மக்கள் பார்வைக்கு இணையத்தில் பதிவேற்றியுள்ளார்கள். இதில் 25 பைசா கொடுத்தவர்களின் பெயர்களும் விடுபடவில்லை.

நிதி கொடுத்தோர் பட்டியலை இங்கு சென்று பார்வையிடலாம்.

http://harvardtamilchair.org/donors

இந்த முயட்சியில் பலர் முன்வந்து செயல்பட்டாலும், சிலர் தாங்களே தமிழ் இருக்கைக்கே முழுநேர குத்தகைக்காரர் என்பது போல் டொரோண்டோவில் பாசாங்குக்காட்டி மேடையேறிணோர் பலர்.  

இன்னும் சிலர் அதுதான் இது , இதுதான் அது என்று இன்றுவரை கவுண்டமணி செந்தில் வாழைப்பழக்கதைபோல் இன்னும் ஒரே குழப்பம்.

தமிழ் இருக்கைக்காக நிதிவழங்கினோர் சிலர் கிழே..

ஹார்வர்டு பக்கத்தில் “கனடிய தமிழ் காங்கிரஸ் (CTC)” பங்களிப்பாக காட்டப்பட்டுள்ள நன்கொடை

Total $8878.50 அமெரிக்க டாலர்

 

ஹார்வர்டு பக்கத்தில் “Ms. Jessica & Soosaithasan Judes” பங்களிப்பாக காட்டப்பட்டுள்ள நன்கொடை

$4,335.50 அமெரிக்க டாலர், அண்ணளவாக $5,000.00 கனடிய டாலர்.

 

ஹார்வர்டு பக்கத்தில் “திரு/திருமதி  Nirothini Pararajasingam” பங்களிப்பாக காட்டப்பட்டுள்ள நன்கொடை

Total $755.10 அமெரிக்க டாலர், அண்ணளவாக $950.00 கனடிய டாலர்.

 

மேலே உள்ள செய்தியில் ஏதேனும் தவறு இருப்பின் ஹார்வர்டு தமிழ் இருக்கையோ அல்லது அமைப்புகளோ உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் பட்சத்தில் அவை திருத்தப்படும்.