மந்திரவாதிகளுக்கு மகிழ்ச்சி செய்தியினை வெளியிடவுள்ள கனேடிய அரசாங்கம்?

சூனியம் வைப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றுபவர்களை குற்றவாளிகளாக்கும் கனடா குற்றவியல் சட்டம் பிரிவு 365ஐ அகற்ற கனடாவின் ஃபெடரல் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் ஒண்டாரியோ பொலிசார் 27 வயது பெண் ஒருவரை சூனியம் எடுப்பதாக ஏமாற்றி பணம் பறித்த குற்றத்திற்காக கைது செய்தனர்.

அண்மையில் மற்றுமொரு ஒண்டாரியோ பெண்ணும் சூனியம் வைப்பது, ஜோதிடம் சொல்வது என பல வழிகளில் மக்களை ஏமாற்றி, மிரட்டி 5000 டொலர்கள் வரை பறித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் தற்போது குறித்த சட்டம் நீக்கப்படுவதால் இனி கனடாவில் யார் வேண்டுமானாலும் மந்திர தந்திரங்கள் செய்யலாம், சூனியம் வைக்கலாம், எடுக்கலாம் என கூறப்படுகின்றது.

எனினும், மந்திர தந்திரங்கள் செய்வதுபோல் ஏமாற்றினால் மோசடி செய்த குற்றத்திற்காக சட்டம் தனது கடமையைச் செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

எது எப்படியே கனேடிய அரசாங்கத்தின் குறித்த முடிவானது மந்திரவாதிகளுக்கு சாதகமான முடிவுகளை பெற்றுத்தரும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.