ட்ரான்ஸிட் சேவை அமைப்புகளை மேலும் வலுவாக்க மேலும் 1 பில்லியன் டொலர்!

அல்பர்ட்டா அரசாங்கம் எட்மட்டன் ட்ரான்ஸிட் சேவை அமைப்புகளை மேலும் வலுவாக்கும் வகையில் மேலதிகமாக ஒரு பில்லியன் டொலர்கள் அதிகரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பினை, பிரதமர் ரேச்சல் நோட்லே, போக்குவரத்து அமைச்சர் பிரையன் மேசன் மற்றும் எட்மன்டன் மேயர் டான் ஐவன்சன் ஆகியோர் இணைந்து நேற்று (வியாழக்கிழமை) அறிவித்தனர்.

அந்தவகையில் மேற்கு வெல்லி போக்குவரத்து சேவைக்காக மேலதிகமாக சுமார் 1.04 பில்லியன் டொலர்கள் செலவிட தீர்மானித்துள்ளதாக அல்பர்ட்டா மாகாணம் அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் அது இன்னும் பல வேலைகளை உருவாக்கும் என்றும், மேற்கு மற்றும் தென்கிழக்கு அல்பர்ட்டாவில் 37,000 நேரடி மற்றும் மறைமுக வேலைகளை உருவாக்க வழிவகுக்கும் என்றும் முதல்வர் ரேச்சல் நோட்லே தெரிவித்தார்.

மேலும் மேற்கு எட்மண்டனில் உள்ள போக்குவரத்து சேவை 2027 அல்லது 2028 இல் நிறைவு செய்யப்பட்டு தென்கிழக்கு எட்மண்டனில் உள்ள கோட்டையின் மையப்பகுதியில் இணைக்கப்படும்.

அத்துடன் 2020 ஆம் ஆண்டின் இறுதியில் தற்போது கட்டுமானத்தில் உள்ள இதன் முதல் பகுதி, திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.