கனடா வங்கி முதல் தடவையாக ஊழியர்களின் பொருளாதாரத் திட்டங்களை வெளியிடுகிறது!

கனடாவின் பொருளாதாரத்தில் பங்களிப்பு செலுத்தும் கடந்த 30 ஆண்டு கால ஊழியர்களின் பொருளாதாரத் திட்டங்களைக் கொண்ட ஒரு டிஜிட்டல் தரவுத்தளத்தை கனடா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

நிர்வாக ஆணைக்குழுவின் காலாண்டு நாணய கொள்கை அறிக்கை (MPR) கணிப்புக்கள் மற்றும் அவற்றின் கொள்கை வட்டி விகித முடிவுகள் தொடர்பாக இந்த திட்டங்கள் செயற்படுத்தப்படும்.

“இந்தத் தரவைப் பெறுவதன் மூலம், வங்கி திறந்த தரவு மற்றும் வெளிப்படைத் தன்மை ஆகியவற்றில் மற்றொரு படிநிலையை எடுத்துக் கொள்கிறது. அத்துடன், ஆராய்ச்சியாளர்களுக்கான ஒரு முக்கிய ஆதார தகவலையும் வழங்குகிறது” என்று வங்கியின் சிரேஸ்ட பிரதி ஆளுனர் கரோலைன் ஏ.வில்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு காலாண்டிலும், வங்கி ஊழியர்கள் கனேடிய மற்றும் சர்வதேச பொருளாதார நிலவரங்கள் தொடர்பாக ஆழமான பகுப்பாய்வு ஒன்றை நடத்தி அதை நிர்வாக ஆணைக்குழுவுக்கு அளிக்கிறார்கள்.

இந்த கணிப்புகள் சமகால தரவுகள் மற்றும் எதிர்வு கூறல்கள் போன்ற பிரதான பொருளாதார குறிகாட்டிகளையும், மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பாக தரவு மற்றும் கணிப்புகளையும் ஒருங்கிணைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.