கனடா உள்ளிட்ட 5 நாடுகள் பெரும்பாலான வனவிலங்குகளை கொண்டுள்ளன – அவற்றை காப்பாற்ற வழியென்ன?

கனடா மற்றும் 4 பிரதான நாடுகள் உலகின் பெரும்பாலான வனவிலங்குகளை கொண்டுள்ள போதும் அவற்றை காப்பாற்ற அந்தந்த நாடுகளின் வனாந்தரங்கள் போதுமானதா? அல்லது எவ்வகையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன? என்று கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.


முக்கியமான பெரிய நாடுகளின் கனடாவும் உள்ளடங்குகின்ற நிலையில், அவை உலக வனவிலங்குகளில் 70 சதவீதத்தை கொண்டுள்ளதாக புதிய ஆய்வுகள் வௌியாகியுள்ளன.

புவியின் மேம்பரப்பில் 77 சதவீதமான பகுதியில் மனித தேவைகளுக்கான மேம்பாட்டு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் என்பன மேற்கொண்டுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற ஆய்வுகளின் அடிப்படையில் கனடா, ரஷ்யா, அவுஸ்ரேலியா, பிரேசில் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள பெரு வனாந்தரங்களில் பல்வகையான உயிரினங்கள் வாழ்கின்றன.

“Protect the last of the wild” என்ற தலைப்பிலான இந்த ஆய்வறிக்கையில் இயற்கை பாதுகாக்கும் படி சர்வதேச சமூகத்திடம் வலிந்து கேட்கப்பட்டுள்ளது. அத்துடன் வனவாழ்க்கைக்கான இருப்புகளை தக்கவைத்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கனடாவின் நில வாழ்விடங்களில் சுமார் 23 சதவீதம் மாத்திரமே வனாந்தரங்களாக உள்ளன. அத்துடன் கடற்பிராந்தியங்கள் மிக மோசமாக உள்ளன.

இதுதவிர, 13 சதவீத காட்டுப்பகுதி மாத்திரமே மனிதனால் இன்னும் தீண்டப்படாமல் உள்ளது. சுமார் 7 மில்லியன் சதுரகிலோமீற்றர் காட்டு நிலப்பகுதியும், 2 சதுர கிலோமீற்றர் கடற்பிராந்தியமும் இதில் உள்ளடங்குகின்றது.

கனடாவின் வடமுனைக்குரிய காடுகளே உலகின் மிகப்பெரிய மனிதனால் தீண்டப்படாத காட்டுப்பகுதியாக திகழ்கின்றது.