நெடுஞ்சாலை 407இல் பல வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்று (புதன்கிழமை) பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் தாங்கி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, வீதியின் கொங்கிறீட் சுவரை இடித்துக்கொண்டு கிழக்கு பாதையில் சென்றுகொண்டிருந்த கார் மீது மோதி வெடித்து சிதறியது.
இந்த சம்பவத்தில் இரு வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டதாகவும், இரு சாரதிகள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
பிரம்ப்டன் பகுதியை சேர்ந்த 41 வயதான ஒருவரும் மிசிஸாகுவா பகுதியை சேர்ந்த 49 வயதான ஒருவருமே இதில் உயிரிழந்துள்ளனர்.