பாஜக எம்.பி டாக்டர் சுப்பிரமணிய சுவாமி கனடா வந்துள்ளார்

இந்து பாரம்பரிய மாத நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இந்தியாவில் இருந்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி கனடா வந்துள்ளார்.

வரும் சனிக்கிழமை (Nov 3, 2018) இந்து நாகரிக கனடிய அருங்காட்சியகம் (Canadian Museum of Indian Civilization) டொரோண்டோ இன்டர்நேஷனல் சென்டரில் (Airport Rd at International Centre; 6900 Airport Road, Mississauga, ON L4T 4J5) நடத்தும் இந்து பாரம்பரிய மாத நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்கின்றார்.

இந்நிகழ்வில் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக விழா அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.