கனடிய தமிழ் காங்கிரஸ் 2016 இல் மக்களின் அவசர வாழ்வாதாரத்துக்கென நிதிசேர் நடையில் சேர்த்த பணம் மாயம்.

கனடாவில் இருக்கும் CTC (கனேடியத் தமிழர் பேரவை; Canadian Tamil Congress) அமைப்பின் அழைப்பின் பேரில் கனடா வந்தபின் இனிமேல் நான் எந்த நாட்டிற்கும் உதவி கேட்டு போகக்கூடாது என்று யோசித்தேன் ஏனெனில் கனடாவில் கிடைத்த அனுபவம்.

நேற்று மாலை மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்களுடன் ஓர் சந்திப்பு நிகழ்வு சங்கமம் மண்டபத்தில் (Sankkamam Party Hall Scarborough ont ,Oct 30, 2018) நடைபெற்றது.

முகநூல் வாயிலாகவும், வானொலிகள் வாயிலாகவும் இந்த சந்திப்பு கடந்த 2 நாட்களாக அறிவிக்கப்பட்ட நிலையிலும் சந்திப்புக்கு மிகவும் குறைந்த மக்களே வந்திருந்தார்கள்.

முன்னணி அமைப்புகள் என்று கூறிக்கொள்ளும் அமைப்புக்கள் எதுவும் இந்த நிகழ்வை நடத்தவில்லை, ஆனால் முன்னனி அமைப்புகளின் முகத்திரை இங்கு கிழித்து தொங்கவிடப்பட்டது வந்தவர்களிடம் பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

2016 இல் CTC (கனேடியத் தமிழர் பேரவை; Canadian Tamil Congress) அமைப்பினரால் கிழக்கில் மாட்டு பண்ணை அமைக்கவென நடந்த நிதிசேர் நடையில் சேகரிக்கப்பட்ட பணத்தில் (1.1 கோடி ரூபாக்கள் | $85,000.00) இதுவரை, 2 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், எந்தவிதமான பணமும் அங்கு சென்று சேரவில்லை.

மக்களின் அவசர வாழ்வாதார உதவிகள் என்று எமது மக்களிடம் சேர்த்த பணம் 2 வருடங்களாக இங்குள்ள அமைப்பே (CTC) வைத்திருக்கின்ற விடயம், போட்டுடைத்தார் கிழக்கின் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்கள்.

கனடிய தமிழ் காங்கிரஸ் 2016 இல் மக்களின் அவசர வாழ்வாதாரத்துக்கென நிதிசேர் நடையில் சேர்த்த பணம்  இதுவரை அந்த மக்களை எந்த வகையிலும் சென்று சேரவில்லை. அனுப்பி வைக்கப்படாமைக்கு ஆயிரம் காரணங்களை, கதைகளை சொல்லலாம். ஆனால் மக்களின் அவசர வாழ்வாதார பிரச்சனைகளை காரணமாக சொல்லி சேர்த்த பணம் இதுவரை அனுப்பிவைக்கப்படாமை ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.

2016 பின்பும் வேறு காரணங்களை சொல்லி மேலும் பல நிகழ்வுகளை இந்த CTC அமைப்பு நடத்தியுள்ளது.

பணம் கொடுத்த மக்கள், உங்கள் மாட்டை தேடிப்பிடியுங்கள்.

மேலும், விடியோவை பார்க்கவும்.

வீடியோ by Ekuruvi