கனடா – அமெரிக்க எல்லையில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் இருவர் கைது!

கனடா – அமெரிக்க எல்லையில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் சகோதர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) மதியம் Nova Scotia வைச் சேந்த இருவர், Woodstock, N.B. மற்றும் Houlton, Maine பகுதிகளுக்கிடையே அவர்கள் பயணித்த காரை நிறுத்தினர்.

கனடா அமெரிக்க எல்லைக்கு நடுவே காரை நிறுத்திய அவர்களிடம் எல்லை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் பேச்சு வார்த்தை நடத்த முற்பட்டபோது அவர்கள் பேச மறுத்தனர். இதனால் எல்லையில் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பாக ஹாலிஃபேக்ஸ் பகுதியைச் சேர்ந்த 21 வயது டாமியன் ரோ என்பவரும் 22 வயது பெய்லி ரோய் என்பவரும் அமெரிக்க எல்லை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் பயணம் செய்த காரும் கைப்பற்றப்பட்டது.

இந்த சம்பவத்தால் பல மணி நேரத்திற்கு எல்லை மூடப்பட்டதுடன், அப்பகுதிக்கான போக்குவரத்துகளும் வேறு வழியில் திருப்பி விடப்பட்டன.