எங்கள் வணிகமே போச்சு.. METROLINX பணியால் குமுறும் வணிகர்கள்..!

Bombardier நிறுவனமானது Metrolinx மேற்கொண்ட உடன்படிக்கையின் படி 76 LRT ரக பயணிகள் ஊர்தியை வழங்க உள்ளது.


இதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், பணிகள் முடிந்த பின்னர் ரொறன்ரோ மக்கள் புது விதமான LRT ரக பயணிகள் ஊர்தியை  பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று Bombardier நிறுவனம் Metrolinx வசம் கையளிக்க உள்ள LRT ரக ஊர்தியை ஊடகங்கள் முன்னிலையில் காட்சி படுத்தியது.

கிழக்கு-மேற்கு பாதை ஊடக பயணிக்க இருக்கும் முதல் ஊர்தியானது வரும் நவம்பர் மாதத்தில்  Metrolinx வசம் அளிக்கப்பட உள்ளது.

மேலும் ஐந்து ஊர்திகள் அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் வரும். இதன் முழு பணிகளும் முடிவடைய 2021 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.

இந்த பணிகள் முழுவதுமாக முடிவடைந்து விட்டால், Mount Dennis முதல் Kennedy வரை 25 நிறுத்தங்கள் உருவாக்கப்படும்.

அதில்  Laird Drive in the east முதல்  Keele Street in the west வரை உள்ள பத்து கிலோமீட்டர் தொலைவுக்கு நிலத்தடியில் பாதை அமைகிறது.

Eglinton Avenue முதல் Kennedy Station வரை 40 நிமிடங்கள் பயணிக்க வேண்டியது. இதன் மூலமாக 26 நிமிடங்களாக குறையும்.

இதற்கான கட்டுமானப்பணிகள் நடந்து வரும் வேளையில் Metrolinx மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

Crosslinx Transit Solutions என்ற நிறுவனமானது Metrolinx மீது பணிகள் தாமதமானத்திற்கு வழக்கு தொடர்ந்துள்ளது.

மேலும் கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடத்தில் தொழில் செய்யும் வணிகர்கள், இதன் மூலமாக தங்கள் வணிகம் 50 சதவிகிதம் குறைந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.