வர்த்தக தடைகளை குறைக்க சஸ்கச்சுவான்- ஒன்ராறியோ உறுதி!

மாகாணங்களுக்கு இடையிலான வர்த்தக முரண்பாடுகளை குறைப்பதற்கு இணைந்து செயற்பட தயாராகவிருப்பதாக சஸ்கச்சுவான் மற்றும் ஒன்ராறியோ பிரதமர்கள் உறுதியளித்துள்ளனர்.


ரொறன்ரோவில் நேற்று (திங்கட்கிழமை) குறித்த இருவரும் கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, அமெரிக்காவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தவும், பொருளாதார ரீதியான போட்டித் தன்மைகளுகளுக்கான குறுக்கீடுகளை குறைப்பது தொடர்பாகவும் கனடா கவனம் செலுத்தி வருவதாக ஒன்ராறியோ பிரதமர் டொக் ஃபோர்ட் தெரிவித்தார்.