ரொறன்ரோவில் மத வழிபாட்டு ஸ்தலங்களிலும் பாதுகாப்பு அதிகரிப்பு!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினை அடுத்து, ரொறன்ரோ பெரும்பாகத்திலும் உள்ள மத வழிபாட்டு தலங்களில் முற்பாதுகாப்பு நடவடிக்கையாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை அங்குளள யூத வழிபாட்டு தலமொன்றில் குழந்தைக்கு பெயர் சூட்டும் நிகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஆயுததாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

இறுதியாக வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அங்கு 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் அறு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலை மேற்கொண்ட துப்பாக்கிதாரியும் பொலிஸாரின் துப்பாக்கிச் சூடடுக்கு இலக்கான நிலையில், காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான நிலையிலேயே கனடாவில், குறிப்பாக ரொறன்ரோ பெரும்பாகத்தில் உள்ள மத வழிபாட்டு மைய்யங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.