கனடாவில் மீண்டும் அமெரிக்க ஆடை நிறுவனத்தின் பிரவேசம்!

அமெரிக்காவின் ஆடை மீண்டும் கனடிய சந்தைக்கு நாளை மறுதினத்திலிருந்து (வியாழக்கிழமை) மீண்டும் பிரவேசிக்கள்ளது.


குறித்த ஆடை நிறுவனமானது, இணைய விற்பனை மூலம் மாத்திரமே தற்போது வர்த்தக செயற்பாட்டை மேற்கொள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிமுறிவிற்கு உட்பட்டு பல நட்டங்களை அடைந்த ஆடை நிறுவனம் கனடாவில் மீண்டும் பிரவேசிக்கின்ற போதிலும், ஒரு வர்த்தக நிலையத்தைக் கூட நிறுவவில்லையென குறித்த நிறுவனத்தின் சந்தை அமைப்பாளர் சபீனா வெபர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஏற்கனவே ஒரு முறை நட்டத்தை அனுபவித்த குறித்த நிறுவனம் இனிமேல் கவனமாக செயற்படுமெனவும் சபீனா சுட்டிக்காட்டியுள்ளார்.

இருபாலினத்தவர்களும் அணியக்கூடிய வகையில் ஆடைகளைத் தயாரிக்கும் குறித்த நிறுவனத்தின் வங்கிமுறிவிற்குப் பின்னர், குறித்த நிறுவனம் ஏல விற்பனையின் போது உரிமம் கைமாறிய சமயத்தில் நிறுவனத்தின் பேரிலுள்ள கிராக்கி அறிந்து கொள்ளப்பட்டது.

அமெரிக்க ஆடை நிறுவனத்தின் புதிய உரிமையாளர் கில்டன் எக்டிவ் வெயார் நிறுவனமாகும்.