31 வருடங்களுக்கு முன்னர் குழந்தையைக் கடத்தியவர் கைது!

31 வருடங்களுக்கு முன்னர் குழந்தையொன்றைக் கடத்தியவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர், பொலிஸ் படையினர் மீது  பொது மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது காவல் துறை மீது நம்பிக்கை கொண்டு தங்கள் குழந்தைகளை கடத்தியவர்களை பொலிஸார் கைது செய்வரென கடத்தப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்னர், ஜேர்மின் என்ற குழந்தையைக் கடத்திய நபர் அலன் மேன், கனடாவின் வேர்நோம் நகரில் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கனடா, கானா நாடுகளின் பிரஜையாவார்.

கடந்த 1987 ஆம் ஆண்டு ஜுன் 24 ஆம் ஆண்டு 21 மாதக்குழந்தையை ரொறன்ரோவில் வைத்துக் கடத்தியமை குறிப்பிடத்தக்கது.