மரினா துறைமுகம் அருகே இருந்த படகில் தீ விபத்து – இருவர் காயம்!

மரினா துறைமுகம் அருகே இடம்பெற்ற தீ விபத்தை அடுத்து இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 7:30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் ரொறன்ரோ தீயணைப்பு வீரர்கள் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதன் போது காயமடைந்த இருவரும் விரைவாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த படகின் எரிபொருள் நிரப்பு தங்கியில் ஏற்பட்ட வெடிப்பே இந்த தீ விபத்திற்கு காரணம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.