பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்திற்கு கனடா ஒப்புதல், அவுஸ்ரேலியா இறுதி கட்ட ஆலோசனை!

ஜப்பான் தலைமையிலான ஒரு பரந்த பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தில் ஐந்தாவது நாடாக கனடா இணைந்து கொண்டுள்ளதாக அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உறுதிப்படுத்தல் கடிதம் ஒன்றை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கம் நேற்று (சனிக்கிழமை) நியூசிலாந்திற்கு அனுப்பியுள்ளது.

பசிபிக் வலயத்திற்கு அப்பால் கூட்டுப் பங்காண்மை கொண்ட 11 நாடுகள் விரிவான மற்றும் முற்போக்கு ஒப்பந்தத்திற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த வியாழனன்று சட்டத்துறையினர் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றிய பின்னர் கனடா அதன் சட்டப்பூர்வ செயல்முறையை வார இறுதிக்குள் நிறைவு செய்துள்ளது.

பசுபிக் வர்த்தக ஒப்பந்தத்தில் ஜப்பான், மெக்ஸிகோ, சிங்கப்பூர், நியுஸிலாந்து, மற்றும் கனடா ஆகிய நாடுகள் தமது ஒப்புதலை அளித்துள்ளன. அவுஸ்ரேலியா இந்த வாரத்தில் தனது தீர்மானங்களை எட்டும் என்று வர்த்தகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.