அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் ஒருவர், கனடிய பிரஜை!

கனடாவின் ரொறன்ரோவில் பிறந்த ஒருவர் அமெரிக்காவில் இடம்பெற்ற பாரிய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் ஒருவராவார்.

அமெரிக்காவின் பிற்ஸ்பேர்க்கில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இடம்பெற்ற பாரிய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த 11 பேரில் கனடா பிரஜை ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜொய்ஸ் ஃபியன்பேர்க் (வயது-75), ஒரு கனடா பிரஜையென்பது, துப்பாக்கித் தாக்குதுலுக்கு அடுத்த தினம் ஃபொரஸ்ட் ஹீலில் இடம்பெற்ற பிரார்த்தனை நிகழ்வின் போதே அறிவிக்கப்பட்டதென தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து, கனடாவிலும் அவருக்கான இரங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.