பாலியல் துஷ்பிரயோகம் செய்தால் உடனடியாக உரிமம் ரத்து செய்யப்படும் – ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை!

ஒன்ராறியோவில் மாணவர்கள் அல்லது குழந்தைகள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகக் கண்டறிந்தால் ஆசிரியர்களின் கல்வி கற்பிப்பதற்கான உரிமம் உடனடியாக நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த விடயம் தொடர்பிலான புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ கல்வி அமைச்சர் லிசா தொம்சன் நேற்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளார்.

ஒன்ராறியோ கல்லூரி ஆசிரியர்களின் ஒழுங்கு நிலைகளை பேணும் வகையில் கல்வி அமைச்சர் லிசா தொம்சன் பாதுகாப்பான மற்றும் துணைபுரியும் சட்டத்தை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் அந்த சட்டத்தை மீறி, பாலியல் துஷ்பிரயோகம் அல்லது பாலியல் ரீதியான துன்புறுத்தல் உள்ளிட்ட  வறான நடத்தைகளில் ஈடுபட்டால், அவர்களின் கல்வி பதிவு செய்யும் சான்றிதழ் திரும்பப் பெறப்படும் எனவும் கூறினார்.