வட்டி விகிதத்தை உயர்த்தியது கனடா வங்கி!

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் கனடா வங்கி trend-setting வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.


அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “வங்கி முன்னதாக எதிர்பார்க்கப்பட்டதை விட இது எதிர்கால உயர்வுகளுக்கு மிகவும் முக்கியமான அணுகுமுறையை எடுக்கும் ஒரு நடவடிக்கை இதுவாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியானது கடந்த 2017 கோடையில் இருந்து ஐந்தாவது முறையாக கால்-புள்ளி (quarter-point) விகிதத்தை அதிகரித்துள்ளது.

அந்தவகையில் இந்த ஜூலை மாதம் முதல் 1.75 சதவிகிதம் அளவிற்கு உயர்வை கொண்டு வர கனடா மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த உயர்வானது ஒரு தசாப்தத்தில் இருந்ததைவிட இப்போது அதிகமாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் புதுப்பிக்கப்பட்ட வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கனடா இந்த மாத ஆரம்பத்தில் அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோவுடன் உடன்பட்டதிலிருந்து மத்திய வங்கியின் முதல் கொள்கை முடிவு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.