கொலை மற்றும் பாலியல் தொடர்பான வழக்குகளில் 28 வயதான தமிழர் கைது !

கடந்த ஜூன் மாதம் 9ம் திகதி இடம்பெற்ற ஒரு கொலை தொடர்பான வழக்கில் 28 வயதான சகிலன் சுரேந்திரன் (Sahilan Surendran) என்ற இளைஞரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


ஒன்றாரியோவில் ஒசாவா பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றதாகவும், உயிரிழந்தவர் Kyle David Baker என்பவர் எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாகன விற்பனை (car dealership) நிலையமொன்றில் இரு இளைஞர்களுக்கிடையிலான தகராறு இறுதியில் துப்பாக்கிச்சூட்டில் முடிந்துள்ளது.

அதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் 28 வயதான Sahilan Surendran என்ற இளைஞரை நேற்று கைது செய்துள்ளனர்.

இவர் ஏற்கனவே 2015 ஆண்டு 21 வயதான இளம் பெண்ணை பாலியல் தொழிலில் தள்ளினார் உட்பட 10 வழக்குகள் இவர்மேல் சுமத்தப்பட்டிருந்த நிலையில் காவலில் இருந்து தப்பித்துள்ளார் என்றும் தெரியவருகின்றது. (Source: https://www.cp24.com/news/two-men-charged-after-woman-taken-off-oshawa-street-and-forced-into-sex-trade-1.2211734)

தற்போதைய நிலையில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருவதோடு கைது செய்யப்பட்ட இளைஞனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த ஆயத்தமாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Sources:

https://www.cp24.com/news/two-men-charged-after-woman-taken-off-oshawa-street-and-forced-into-sex-trade-1.2211734

https://www.cbc.ca/news/canada/toronto/durham-arrest-shooting-suspect-sahilan-surendran-1.4876474