Markham Mayor Frank Scarpitti

மார்க்கம் மேயராக நான்காவது முறையாகவும் தேர்வு செய்யப்பட்டார் பிராங்க் ஸ்கார்ஸ்பிட்டி!

மார்க்கம் மேயராக பிராங்க் ஸ்கார்ஸ்பிட்டி நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின்னர் கருத்து தெரிவித்த அவர் 1985 க்குப் பின் இப்போதுதான் வெற்றி பெற்றவர் போல் உணர்வதாக கூறினார்.

மேலும் அவருக்கு 55,523 வாக்குகளும், அவருக்கு எதிராக போட்டியிட்ட ஸ்டீவன் சென்க்கு 11,068 வாக்குகள் கிடைத்தது.

அத்துடன் மார்க்கம் வட்டாரம் 7 நகரசபைப் பிரதிநிதித் தேர்தலில் 5 தமிழர்களுக்கு இடையிலான போட்டியால் அனைத்து தமிழர்களுக்கும் வெற்றி வாய்ப்பு இழக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Photo Credit: Gana Arumugam (Ninaivukal)